நீண்டு கிடந்தது
என் இரவு.
நொடி நொடியாய்..
அணு அணுவாய்..
ரசித்தபோது.
நீண்டு கிடந்தது
என் இரவு.
சுடு மணலாய்க்..
கொடு நரகாய்..
தகித்தபோது.
இரவில்
என் நீண்ட வானில்
என் அனுபவங்களின் திரட்சியாய்
மேகங்கள்.
நட்சத்திரங்களின் ஒளிப்பாதையை
மறித்தபடி,
மௌனத்தின்
மெல்லிய விரிப்பின் மடிப்புகளில்
நான் குழந்தையானேன்.
மெல்லச் சிரித்தது
நிலவு.
அன்புடன்,
காசிகணேசன் ரங்கநாதன்.
No comments:
Post a Comment