Friday, April 17, 2009

சிந்தனைக்கு சில ,

  • நிதானம் இழக்காமல் அமைதியாக இருக்க முயல்வது என்பதும், நிதானம் இழக்காமல் அமைதியாக இருப்பதும் ஒன்றல்ல. 
  • தவறான நேரத்தில் தங்கம் தருவதை விட மேலானது, சரியான நேரத்தில் கல்லெறிவது. 
  • முட்டாள்கள் தங்கள் மடமையை மரியாதை என்னும் போர்வையால் மறைத்துக் கொள்கிறார்கள். 
  • பயம் கதவைத் தட்டுகிறதா? நம்பிக்கையை எழுந்து போய் கதவைத் திறக்கச் சொல்லுங்கள். வெளியே ஒருவரும் இருக்க மாட்டார்கள். 
  • சரியான வழியைத் தெரிந்து, அதில் நடப்பவன் மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் அந்த வழியைக் காட்டுபவனே உண்மையான தலைவன்.
  •  வாழ்க்கையில் சின்னச் சின்ன சந்தோஷங்களையும் அனுபவித்து விடுங்கள். இல்லையெனில், நாளை ஒருநாள் திரும்பிப் பார்க்கையில், அவை தவற விட்ட பேரின்பமாகத் தோன்றி வருந்தும்.
  •  'இரவு உணவுக்கு என்ன செய்யலாம்..' என மூன்று ஓநாய்களும், ஒரு வெள்ளாடும் கூடி உட்கார்ந்து முடிவு செய்வதற்குப் பெயர்தான் ஜனநாயகம்.
  •  எழுந்து நின்று பேசுவது மட்டும் வீரம் அல்ல; உட்கார்ந்து கவனிப்பதும்தான். விவாதத்தால் தீர்வு கிடைத்துவிடும் என்று சொல்லமுடியாது. ஆனால் விவாதம் இல்லை என்றால் தீர்வு என்பதே கிடையாது.
  •  எதில் நிற்கிறாய் என்பதில் உறுதியாக இரு.எதில் விழுகிறாய் என்பதில் கவனமாக இரு.

No comments: